Wednesday, June 18, 2008

அறிவியல் ஆன்மீகம் மதம்: கென் வில்பரை முன்வைத்து!

சில மாதங்களாகவே ஒரு பதிவை எழுத ஆரம்பித்து அது முடிவேயடையாமல் என்னை ரொம்பவும் படுத்தி எடுத்து விட்டதால் அதை கொஞ்சம் காயப்போட்டு விட்டு வேறு எதையாவது கொஞ்சம் எழுதிப் பார்கலாமே என்ற முடிவுடன் இன்று உக்கார்ந்தால் என்ன எழுதுவது என்றே புரியவில்லை. பிறகு பத்ரி Pseudo-Science மற்றும் New Age பற்றி எழுதச் சொன்னது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி மட்டும் தனியாக எழுதுவதற்கு பதிலாக அதனோடு தொடர்புடையவற்றையும் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று பட்டது.

*-*-*
தமிழ் வலைப்பதிவுகளை சில காலமாகவே படித்து வருகிறேன். எத்தனை எண்ணங்கள். எத்தனை குழுக்கள். குழப்பங்கள். வம்புகள். சண்டைகள்.

தீவிரமாக அகம், இந்து தர்மம், உள்ளொளி என்று பேசுபவர்கள் சிலர்.

உள்ளொளி என்ற வார்த்தையைக் கேட்டாலே அதே போல் ஒலியமைப்புள்ள ஒரு தமிழ்க் கெட்ட வார்த்தையை கூறும் நீட்ஸே, ஹெய்டீகர், ஃபூகோ, உடலரசியல் என்று பேசும் சிலர்.

'முதலாலித்துவ குட்டையில் ஊறின மட்டைகளே.. குட்டி பூர்ஷ்வாக்காளே..' என்று செல்லமாக மிரட்டும் அதிதீவிர வலதுசாரிகள் ஒரு சிலர்.

'பார்ப்பன அடிவருடிகளே.. ஃபாஸிச மலங்களே' என்று திராவிடம், பெரியாரிசம் பேசும் சிலர்.

இவற்றின் நடுவே தடம்தெரியாமல் மாட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று குழம்பி பிறகு Freakonomics, Tim Harford, James Surowiecki, David Weinberger, Entrepreneurship என்று தங்கள் அடையாளத்தை தேடிச் செல்லும் சிலர்.

இது எதுவுமே வேண்டாம் என்று தினவாழ்வு குறித்த அரட்டைகளில் மட்டும் ஈடுபடும் பலர்.

இதன் நடுவில் சாரு, ஜெயமோகன், எஸ்.ரா, நாகார்ஜுணன் போன்ற எழுத்தாளர்களின் வலைப் பிரவேசம். அவர்களைச் சுற்றி உருவாகும் வாசகர்கள் மற்றும் குழுக்கள்.

ஒரு புது வாசகன் இந்த விசித்திர காட்டின் ஊடே எப்படி பயனிப்பான்? எதில் ஆரம்பிப்பான்? எந்த இடத்திற்கு வந்து சேர்வான்? எவ்வழியாக வந்து சேர்வான்? எப்படி வந்து சேர்வான்? காட்டை கடப்பதற்குள் அவன் எத்தனை பாதைகளை கடக்க வேண்டி வரும்? காட்டை கடந்ததாக எண்ணி அவன் அடையும் இடமும் இன்னொரு காடுதானோ?

*-*-*

தமிழ்ச் சூழலில் மட்டும் தானா இப்படி என்று பார்த்தால் எல்லா இடங்களிலும் உள்ளதுதான் இது என்பது புரியவரும். இந்த பதிவில் New Age, Pseudo Science போன்ற ஒரு சிலதை மட்டும் கொஞ்சம் மேம்போக்காக பார்ப்போம். வரப்போகும் பதிவுகளில் மேலும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.

*-*-*

New-age spirituality ஒரு வகை உயர்த்திப்பிடித்தல்(‘Elevationism'). இயற்பியல் உட்பட அனைத்தையும் கடவுள் காரணிகளால் விளக்க முற்பட்டு அனைத்தயும் உயர்த்திப் பிடிப்பது ஒரு வகை. மற்றோரு வகை Neale David Walsch, Robin Sharma, சுவாமி சுகபோகானந்தா போன்றோர்களால் ஆனது. தியானம் செய்தால் புத்துணர்ச்சி பெருகும்.தியானம் செய்தால் நீங்கள் தினமும் Treadmillஇல் லொங்கு லொங்கென்று ஓடத் தேவையில்லை. ஓம் நமோ நாராயணா என்று நீங்கள் இருநூறு முறை ஜபித்தால் வேலையில் இருந்து கவனம் சிதறாது. உங்கள் மேலதிகாரி உங்களைப் பார்த்து impressஆகி பதவி உயர்வு தருவார், மனம் மூன்று லார்ஜ் அடித்தது போல் relaxஆக காத்தோட்டமாக இருக்கும் என்பது போல் இவ்வகை நீளும். (இதுக்கு நான் மூணு லார்ஜே அடிச்சிட்டு பேசாம இருப்பனே என்று நீங்கள் கேட்பது புரிகிறது)

Pseudo-science ஒரு வகை சுருக்குதல் ('Reductionism'). Mysticism உட்பட எல்லாவற்றையும் இயற்பியலின் மூலம் விளக்க முற்பட்டு அனைத்தயும் பருப்பொருட்களாக(Matter) சுருக்குககுவது இது. Quantum mechanics பற்றி பைபிளில் இந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது. M-Theory பற்றி நடராஜர் சிலையில் பல குறியீடுகள் உள்ளன போன்றவை. கேரி ஷுகாவ் (Gary Zukav) முதல் மணி பௌமிக் வரை பல உதாரணங்கள். இதை எல்லாம் ஆரம்பித்து வைத்த காப்ரா (Capra) பிறகு தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டார். அவருக்கும் கென் வில்பருக்கும்(Ken Wilber) நடந்த விவாதம் Pseudo Science மற்றும் New Age குறித்து பல தெளிவுகளை அளித்தது. அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்

New-Age மற்றும் Pseudo-Scienceல் மட்டும் அல்லாமல் தீவிரமான அறிவியல் ஆராய்சிகள் - Consiousness, Cognitive Science, Transpersonal psychology பற்றிய ஆராய்சிகளிலும் இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதை தவறுகள் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இவை பிளவுபட்ட ஒரு உண்மையையே நமக்கு அளிக்கின்றன். (முழு முதற் உண்மை தான் எதற்கு வேண்டும்.. அவை நிலபிரபுத்துவ மதிப்பீடுகளால் ஆனது.. ஃபாஸிசத்தில் தான் அது போய் முடியும் என்றும் கேட்கலாம். அதைப் பற்றியும் பிறகு..)

*-*-*

யூங் இதில் கூறப்பட்டுள்ள முதல் வகை என்றால் ஃப்ராய்ட் இரண்டாம் வகை. விக்டர் ஃபிராங்கல் முதல் வகை என்றால் லக்கான் இரண்டாம் வகை. ஃப்ராய்ட் id-ego-superego, Infantile regression என்று சுருக்குகிறார் (reductionism). யூங் ஆழ்படிமம் (Archetypes) என்று அதை elevate செய்கிறார்.

அதே போல் Cognitive Neuroscienceல் வி.எஸ்.ராமசந்திரன் மற்றும் ஸ்டீவன் பிங்கர் போன்றோர் மனதை (Mind) மூளையாக (Brain) சுருக்குகிறார்கள். ஒரு ஆன்மீக அனுபவத்தை (Mystical experience) மூளையில் உள்ள Temporal Lobesல் நடக்கும் ஏதோ கசமுசா என்று சொல்கிறார்கள். ராமசந்திரன் இவ்வகை சுருக்குதலை மறுத்தாலும் அவரின் ஆராய்ச்சிகள் பலவும் இந்த Mind-Brain சுருக்குதலைச் சுற்றியே உள்ளது .

ஒரு ஆப்பிளை பார்த்தவுடன் மூளையில் சில பகுதிகள் கிளர்ச்சியடைகின்றன என்பதனால் ஆப்பிள் என்ற ஒன்றே கிடையாது ஆப்பிள் என்பதே மூளையின் அந்த பகுதியில் நடக்கும் ஒரு சில நியுரான்களின் சிதறல்கள்தான் (Neuronal Fireworks) என்று கூறமுடியுமா? அதே போல் ஒரு ஆன்மீக அனுபவம் Temporal Lobesல் உள்ள சில பகுதிகளை கிளர்ச்சியடையச் செய்தால் அந்த அனுபவம் ஒரு Mystical experienceஏ கிடையாது அது வெறும் நியுரான்களின் சிதறல்கள் என்று தான் சொல்லமுடியுமா?

ஒரு வசதிக்காக இந்த இரண்டு வகையையுமே நாம் ‘Reductionism / சுருக்குதல்' என்று வைத்துக் கொள்வோம். ஒன்றின் உண்மையான தன்மையை அது இல்லாத வேறு ஒன்றாக சுருக்குதல். இந்த சுருக்குதல்களால் பல பிரச்சனைகள். சேரவே சேராது என்று நம்மை நினைக்க வைக்கும் பல பாதைகள். அதைச் சுற்றி எழும் குழுக்க்கள். அக்குழுக்களின் மீது எழும் அதிகார மையங்கள். சண்டைகள். சச்சரவுகள். மற்றும் பல.

ஏன் இந்த தவறுகள் நடக்கின்றன? மேலே குறிப்பிட்ட பலர் பேரறிஞர்கள். மிக முக்கியமான பல கண்டுபிடிப்புகளை நமக்குத் தந்தவர்கள். இருந்தும் ஏன் இப்படி? பல காரணங்கள் இருக்கக் கூடும். அவ்வறிஞர்கள் இருந்த காலகட்டம் மற்றும் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். ஃப்ராய்ட் இருந்த இருக்கமான விக்டோரியன் வியன்னா சூழல் அவரின் ஆராய்ச்சி முடிவுகளை பாதித்திருக்கலாம். ஒரு வித skeptical பின் நவீனத்துவச் சூழலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ராமசந்திரனை பாதித்து இருக்கலாம்.

இது தவிர வல்லுநர்களுக்கே (Specialist) உரித்தான சில பண்புகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். 'Small is Beautiful' என்ற புத்தகத்தை எழுதிய E.F. Schumacher இப்படி கூறுகிறார் - “Most specialists normally suffer from a kind of metaphysical blindness, assuming that theirs is a science of absolute and invariable truths, without any presuppositions”. தனது துறையே தனது ஆராய்ச்சியே மானிட குலத்தின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. ஒரு வித Metaphysical Blindness. இதில் வேடிக்கை - Metaphysical speculationல் ஈடுபடுவோர்கள் (தத்துவ அறிஞர்கள், மெய்ஞானம் குறித்த உளவியல் ஆராய்ச்சித் துறைகளில் இருப்பவர்கள், மொழியியல் அறிஞர்கள் மற்றும் பலர்) கூட இந்த Metaphysical Blindnessக்கு விதிவிலக்கல்ல. அவர்களையும் இந்த Blindness அலைக்கழிக்கிறது. கடைசி காலத்தில் E.F.Schumacher கூட இதில் சேர்த்தி என்பது ஒரு வித சங்கடமான உண்மை.

*-*-*

சர்தான்பா..எல்லாருமே தப்புன்னா அப்போ நாம எங்க தான் போறது? இது வரைக்கும் கண்டுபிடிச்சது எல்லாமே தப்புன்னா அப்போ எல்லாத்தயும் குப்பையில போட்டு கொளுத்திட்டு முதல்ல இருந்து ஆரம்பிச்சா எல்லாம் சரியாயிடுமா? என்று கேட்கலாம். கொளுத்தி போடதெல்லாம் போதுமே. அப்படியே கொளுத்திவிட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்தாலும் நாம் வந்த இடத்திற்க்கே மறுபடியும் வருவதற்கான சாத்தியங்களும் உண்டு.

இக்காலம் வரை நமது பல தியரிகளில் பல Methphysical speculationகளில் பல கண்டுபிடிப்புகளில் குறைகள் இருக்கலாம். அவைகள் முழு முதற் உண்மையாக இல்லாமல் இருக்கலாம். அதே போல் அவைகள் முழு முதற் தவறுகளும் இல்லை. கென் வில்பர் சொன்னது போல் ‘I believe No human mind is smart enough and capable of producing 100 per cent error'. இதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால் - ‘Everybody is Correct'. (Well, to an extent).

கொளுத்தி போட்டு விட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிப்பது அல்ல நம் வேலை. பற்பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் நம்மால் முடிந்த வரை ஒரு முழுமையான தளத்தை அளிப்பதே. 'Integral' என்பது நம் அரவிந்தரில், நாராயண குருவில் இருந்து பலரும் பல வகையில் பேசி வந்ததே. இது வரையில் ஒரு வித அடைய முடியாத இலக்கு போலவே இருந்தது. ஆனால் இப்பொழுது கென் வில்பர் என்ற ஒருவர் தனது எழுத்தின் மூலம் மிகத் தீவிரமாக அதற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

மேலே சொன்னது போல் பல துறைகளில் உள்ள எதிர்மறைக் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி அதன் மூலம் முடிந்த வரை ஒரு முழுமையான சித்திரத்தை அளிப்பதே ‘Integral Approach' ஆகும். மாறுபட்ட கருத்துக்கள், நாராயண குரு சொன்னது போல், ஒன்றை ஒன்று நிரப்பி, ஒரு முழுமையாண சித்திரத்தை நோக்கிச் செல்கின்றன. இதற்கு பல தளங்களில் ஒருவர் ஆழமாக படித்திருக்க வேண்டும். அப்படியே படித்தாலும் கூட அத்தளங்கள் அளிக்கும் பல நுண்ணிய சிக்கல்கள் மற்றும்
வேறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு அதை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான சித்திரத்திற்கு வந்தடைய ஒரு ஆயுள் போதாது. ஆனால் கென் வில்பர் இதை கொஞ்சம் முயற்சித்துள்ளார். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய தத்துவங்கள், உளவியல் மட்டும் அல்லாமல் இயற்பியல், உயிரியல், வேதவியல்(அவர் ஒரு BioChemistry மாணவர்.Biochemistry முனைவர் பட்ட ஆய்வில் இருந்து வெளியேறி அடுத்த பத்து வருடங்களில் ஒரு உணவகத்தில் Dishwasherஆக வேலைப் பார்த்துக்கொண்டு 6 புத்தகங்களை எழுதினார்) போன்ற பல துறைகளில் ஆழமாக பயின்றவர். பின் நவீனத்துவம் பற்றிய அழகான புரிதலும் உண்டு. ஆனால் இவை அனைத்தின் போதாமைகளையும் உணர்ந்த அவர் 'Integral Methodological Pluralism' என்ற ஒரு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முறையை (Research and Praxis Method) உண்டாக்கினார். இதில் Phenomenologyஇல் இருந்து Orienting Generalizationவரை, Gestalt theraphyயில் இருந்து பல வித தியான, யோக முறைகள் வரை , Hermeneuticsல் இருந்து Rogerian Counsellingவரை, Transactional Analysisல் இருந்து Bio-Energetics வரை பல பல வித முறைகள் அடக்கம். எல்லாவற்றையும் கலந்துக் கட்டுக் கொண்டுள்ள ஒரு காக்டெய்ல் அல்ல இது. நம் மன அமைப்பின் பலவித அடுக்குகளுக்கேற்ப பலவித முறைகள்.

அனைத்து கேள்விகளுக்கும் பதில்களிக்கக்கூடிய மாயக்கண்ணாடியே தனது தியரிகள் போன்ற Delusions மற்றும் Metaphysical Blindness அவரிடம் இல்லை. அவர் உருவாக்கிய தியரிகளை ஒருவித வரைபடங்கள் என்றே கூறுகிறார். உள்ளடக்கம் அற்ற வரைபடங்களே (Maps & Frameworks devoid of content)அவை. அவற்றுக்கு வண்ணம் தீட்டுவதும் உள்ளடக்கம் அளிப்பதும் அந்தந்த துறைகளில் உள்ள Specialistகளின் வேலை.

கென் வில்பர் பற்றிய ஒரு அறிமுகப் பதிவை எழுகிக் கொண்டே உள்ளேன். இந்தப் பதிவில் மதம், ஆன்மீகம் மற்றும் அறிவியல் குறித்த அவரின் சில கருத்துக்களை மட்டும் பார்ப்போம். இவை New Age மற்றும் Pseudo Science குறித்து சில தெளிவுகளை நமக்கு அளிக்கும்.

*-*-*

மதம் என்ற சொல்லுக்கு பின் நமக்கு ஒரு பொதுப் புரிதலே உள்ளது. மதம் என்று நாம் குறிப்பிடும் போது எவ்வகை மதத்தை நாம் குறிப்பிடுகிறோம்? அது ஒரு தனிநபரை மய்யப்படுத்தும் மதமா (Egocentric religion), இல்லை ஒரு குழுவை மய்யப்படுத்தும் மதமா (Ethnocentic religion) இல்லை ஒரு உலகமனைத்தயும் அரவணைத்து எழும் மதமா (Worldcentric religion)?

இந்து மதத்திலும் Egocentricவகை உண்டு, Ethnocentricவகை உண்டு, Worldcentricவகை உண்டு. அதே போல் கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் இந்த மூன்று வகைகள் உண்டு. பழங்குடி மதங்களிலும் உண்டு. செமிடிக்கிலிருந்து பாகன் மதங்கள் அனைத்திலும் இவ்வகைகளைக் காணலாம். இந்த மூன்று வகைகளுமே ஒரு வித கீழிருந்து மேல்நோக்கும் வகைப்படுத்துதல் (bottom-up classification). அதாவது அந்த மதத்தை வழிபடுபவரின், அந்த குழுவின் தன்மைகளில் (generic traits) இருந்து அவ்வகைகள் எழுகின்றன. ஒரு வகையில் இருந்து ஒருவர் இன்னொன்றுக்கு ஒருவர் முன்னேறலாம். இவை ஒருவித linear தன்மை கொண்டவை அல்ல. இந்த வகைகள் கடலலைகளைப் போல். ஒன்றுடன் ஒன்று சிறிது கலந்தே இருக்கின்றன (Fuzziness) . கண்மூடித்திறப்பது போல் ஒருவன் ஒரு வகையில் இருந்து இன்னொரு வகைக்குத் தாவ முடியாது. அவ்வகை திடமான திட்ட வட்டமான வரையரைகளும் இதற்கு கிடையாது. இதை புரிந்து கொள்வது அவசியம்.

உதாரணமாக Egocentric Religion வகையை ஒரு புரிதலுக்காக இப்படி விளக்கலாம். சிறுவயதில் (எனக்கு காலேஜ் வரையில்) பரிட்சையில் பாசானால் புள்ளையாருக்கு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக் கொள்ளுதல், என்னை ஏமாற்றி ஓடியவன் மீது கடவுள் தான் லாரியை ஏவி விட்டார் போன்ற நம்பிக்கக்கள் ஜோதிடம், செய்வினை, Vodoo போன்றவைகள். தனிமனித ஆசைகளை, ஏக்கங்களைச் சுற்றியே இவை இயங்குகின்றன. Vodooவில் ஒரு தனி மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதற்க்காக மனித வடிவில் உள்ள பொம்மை மீது ஊசியைக் குத்துவது Egocentric religionக்கு சிறந்த உதாரணம். பிரபல ஊடகங்களில் மதத்தின் பொருட்டு அதிகமாக பேசப்படுபவை இவ்வகையே.

அடுத்து Ethno-centric religion. இதை பற்றி அதிகம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தமிழ் வலைப்பதிவுகளில் அதிகம் காணப்படுவது இதுவே. பல அரசியல் மற்றும் மத நிறுவனங்களும் இவற்றைச் சுற்றியே. மற்றோரு குழுவால் மற்றோரு மதத்தால் ஒரு மிகப் பெரிய ஆபத்து தமக்கு தன் மதத்துக்கு தன் குழுவுக்கு ஏற்படப் போகிறது போன்ற ‘Conspiracy theory'க்கள் மீது கண் மூடித்தனமான நம்பிக்கைகள் இவர்களுக்கு இருக்கும். அதற்கான ஆதாரங்களை திரட்டியபடியே இருப்பார்கள். இவை அனைத்துமே Mythologies மீது கட்டப்பட்டுள்ளவை. இவ்வகை வலைத்தளங்களுக்குச் சென்றால் காணக்கிடைக்காத கறுப்பு வெள்ளை மற்றும் பலவர்ண படங்களை நீங்கள் கண்டு மகிழலாம். பல்வேறு அனுமார்கள், கிருஷ்ணபரமாத்மாக்கள், சிவலிங்கம், நடராஜர், ஏசு கிருஸ்து மற்றும் தினசரிகளில் வரும் அரிய செய்திகள், பண்டைய நாணயங்களின் படங்கள் போன்றவைகளை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்திய கொடி ஏந்தி தலையை தலையை ஆட்டிக் கொண்டு மார்ச்ஃபாஸ்ட் செய்யும் சிறுவனையும் நீங்கள் ரசிக்காமல் இருக்க முடியாது.

World-centric Religion - இவைகளை தாண்டி ஒருவர் செல்லும் போது அடைவது. ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் இடையே ஒரு பாலம் போல். Egocentric மற்றும் Ethnocentric போன்ற குறுகிய அடையாளங்களில் இருந்து வெளியேறுவது. இதைப் பற்றி ஜெயமோகன் ஆன்மீகம், தத்துவம், மதம் என்ற ஒரு அழகான கட்டுரையை எழுதியுள்ளார்.

*-*-*

ஆன்மீகம் குறித்தும் அறிவியல் குறித்தும் பல தவறான புரிதல்களை நமக்கு பல அமைப்புகளும் ஊடகங்களும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. New Age ஆன்மீக அனுபவத்தை ஏதோ ஒரு ட்ராபியை வெல்வது போல் உயர்த்தித் தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளது. மெய்ஞான அனுபவம் அடைந்த ஒருவன் உலகிலேயே மிக புத்திசாலியாக பலசாலியாக ஆவான் போன்ற பொத்தாம்பொதுவான கருத்துக்கள் அவர்கள் உதிக்க அது அறிவியல் அறிஞர்களைக் கோபம் கொள்ளச் செய்கிறது. ஒரு மெய்ஞானி Third Order Differential Equationயை solve பண்ண முடியுமா, F1 பந்தையத்தில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியுமா என்று அவர்கள் சவால் விடுகிறார்கள். எல்லாமே ஒரு வித கேலிக் கூத்தாகி விடுகிறது.

அதே போல் அறிவியல் அறிஞர்களும் சும்மா இல்லாமல் இந்த உள்ளொளி ஆன்மீக அனுபவம் எல்லாம் சும்மா புருடா. எங்கே நிரூபிக்கச்சொன்னுங்கள் அவர்களை என்று சவால் விடுகிறார்கள். ராமசந்திரன் போன்றோர் ஒரு படி மேலே போய் ஆன்மீக அனுபவத்தையும் Temporal Lobesல் நடக்கும் வானவேடிக்கையாக விளக்க முயல்கிறார்கள்.இந்த குழப்பங்கள் சமூகவியல், மானுடவியல், தத்துவம், இலக்கியம் போன்ற பல துறைகளை பாதித்து உள்ளது. ஒரு வித இரட்டை தன்மையை எல்லா துறைகளிலும் ஏற்படுத்தியது. நம் பிரமிளும் சுந்தர ராமசாமியும் கூட இதனால் ஏதொ ஒரு வகையில் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

இதை கென் வில்பர் Pre/Trans Fallacy என்கிறார். Pre-rational நிகழ்வை Trans-Rational அனுபவத்தோடு குழப்பிக் கொள்வது. ரோஸ்ஸோ போன்ற கற்பனாவாதிகளில் (Romanticists) இருந்து யூங் போன்ற உளவியல் அறிஞர்கள் வரை இந்த Fallacyல் மாட்டிக் கொண்டவர்கள் அதிகம்.

உதாரணமாக அடிக்கடி நாம் குழந்தைகளை இயற்கையோடு ஒன்றி இருப்பவர்கள், சுயமிழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் போன்று வர்ணிக்கிறோம். இவை இலக்கியச் சரியாக இருக்கலாம். ஆனால் இவ்வகை elevationism அறிவியல் சரியாக இருப்பதில்லை. Pre-Personal Consiousnessயை Trans-Personalஆக உயர்த்துவதே இது. பியாஜே, மார்கெரெட் மாஹ்லெர் போன்றோரின் குழந்தைகள் பற்றிய ஆய்வுகளில் குழந்தைகள் ஒன்றும் சுயத்தை இழந்து ஆனந்தத்தில் மிதப்பவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. சுயமே இன்னும் வளராத ஒரு disassociated நிலையிலேயே அக்குழந்தை உள்ளது. William James அதனை ஒரு ‘Blooming Buzzing Confusion' என்கிறார்.

Transpersonal psychology குழந்ததையின் மனம் சுயமிழந்து தூய நிர்வாண நிலையில் உள்ள ஒன்று என்றே வகைப்படுத்துகிறது. 12-18ஆவது மாதத்தின் போது இரட்டை தன்மைகள் அதற்குள் கூடிகொள்கிறது என்றும் பிறகு வாழ்க்கையே ‘Return to Innocence'க்கான ஒரு போராட்டம் தான் என்கிறது Transpersonal psychology. இது கவித்துவச் சரியாக இருக்கலாம். Developmental psychologyஓ சுயமே இன்னும் வளராத குழந்தை எப்படி சுயத்தை இழக்க முடியும் என்று கேட்டது. ‘Return to Innocence'க்குப் பதில் 'Growth-to- Goodness' என்ற கருத்தை வைத்தது. இக்கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் பலகாலமாக Developmental Psychologyக்கும் Transpersonal Psychologyக்கும் உள்ள உரசலைத் தீர்க்கலாம்.

அதே போல் நவினத்துவம் Trans-Rational தன்மைகள் அனைத்தையுமே Pre-Rationalஆக சுருக்க நினைத்தது. ஏன் என்றால் Trans-Rational, Pre-Rational இரண்டுமே *Non*-Rational. நவீனத்துவத்திற்க்கும் Rationalityக்கும் உள்ள உறவு தான் நமக்குத் தெரியுமே. தனிப்பட்ட காரணங்கள் தவிர பிரமிளுக்கும் சுராவுக்கும் இருந்த இறுக்கத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஜெயமோகன் தனக்கும் சுராவுக்கும் நடந்த சில உரசல்களைப் பற்றி ‘நினைவின் நதியில்' விரிவாக எழுகியுள்ளார். இதே போல் பல உதாரணங்களைக் கூறலாம்.

Trans-Rationalயை நான் எதற்கு நம்ப வேண்டும்? அனுபவ வாதத்தில், புற வயமாக (Empirically) இதை நிரூபிக்க முடியுமா என்று கேட்கலாம்.

இதற்கும் அறிவியல் பற்றிய நமது சுருங்கிய புரிதல்கள் தான் காரணம்.

தாமஸ் குன் (Thomas Kuhn) 'The Structure of Scientific Revolution' என்ற புத்தகத்தை எழுதினார். அதைப் பற்றி ஒவ்வொருவரும் அவரவர்கள் விருப்பத்திற்கேற்க விளக்கம் கொடுத்தார்கள். ‘Paradigm', Injunction', 'Exemplar' அது இது என்று தங்களுக்கு என்ன தோன்றியதோ தங்கள் நம்பிக்கைக்கு எது ஏதுவாக உள்ளதோ அதைத்தான் அதையேத்தான் குன் கூறினார் என்றார்கள். அறிவியல் ஒருவித சமூகக் கட்டுமானம், அறிவியல் அடிப்படையான உண்மைகள் எதையும் அளிக்கவில்லை.. உண்மைகள் இதுவாக இருக்கக்கூடும் என்ற ஒரு ஊகத்தயே, Interpretationயே தான் அளிக்கின்றன என்றும்.. அறிவியலை ‘paradigms' தான் ஆள்கின்றன, 'paradigms' தான் அறிவியலுக்கு உருவத்தயும் உள் அடக்கத்தையும் அளிக்கின்றன. உங்களுக்கு ஒரு ‘paradigm' பிடிக்கவில்லை என்றால் சட்டை பேண்ட் மாத்துவது போல் ஒரு 'paradigm'இல் இருந்து இன்னொரு ‘paradigm'க்கு மாறலாம் (நீங்கள் மாத்துவது தங்கள் சட்டை பேண்ட் இல்லை..அறிவியலின் சட்டை பேண்ட் போன்றவற்றைப் பற்றிக் கவலைப் படாமல்!). இதிலுல்ல சில கருத்துக்கள் சிறிது காலம் கழித்து ‘பின் நவீனத்துவமாக' விஸ்வரூபம் எடுத்து வந்தது.

குன் அடிப்படையில் அறிவியலை பற்றிக் கூறுகையில் அறிவியலின் மூலாதாரமான சில பண்புகளை ‘Scientific Inquiry' மற்றும் ‘Three Strands of Valid Knowledge' என்று விளக்கினார். அவை:

1) Instrumental Injunction - இதைத் தான் paradigm, exemplar, practice ordinance மற்றும் பல சொற்களைக் கொண்டு குன் விளக்கினார். அதாவது ‘இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய்' (If you want to know this, Do this). இந்த உப்பு காப்பர் சல்பேட் தான் என்று தெரிந்து கொள்ள இந்த வேதவியல் பரிசோதனைகளைச் செய். இந்த நீர்ன் அடர்த்தியை அரிய இந்த பரிசோதனயைச் செய்.. என்பது போல்.

2) Direct apprehension - மேலே நீங்கள் செய்த இந்த பரிசோதனையின் விளைவு. அனுபவப் பூர்வமாக அறிந்த முடிவுகள்.

3) Communal confirmation - வந்த 'result' சரிதானா என்று உறுதி செய்ய உங்கள் வாத்தியாரிடமோ, லேப் அட்டெண்டரிடமோ சரிபார்த்துக் கொள்வது. (முத்துலிங்கத்தின் ஒரு கட்டுரை ஞாபகம் வருகிறது)

இவை ஒரு பள்ளி பாடசாலை ஆராய்ச்சியில் மட்டும் இல்லாமல் எல்லா வகை அறிவியல் ஆராய்ச்சிக்கும் பொதுவான ஒன்று. அறிவியலுக்கே பொதுவான ஒன்று என்று கூட கூறலாம்.

இவற்றை வைத்துக் கொண்டு ஆன்மீக அனுபத்தை Empiricalஆக நிரூபிக்க முடியுமா? இதிலும் ‘Empiricism' என்று நாம் எதை வரையரைக்கிறோம் என்பதில் தான் உள்ளது.



'Empiricism' என்பது ‘Dogma'க்களை நம்பாமல் அனுபவப் பூர்வமாக நாம் உணர்வது என்பது ஒரு விளக்கம்.



இதில் நாம் பொதுவாக கண்களால் காண்பவையே ‘Empirical' என்று எண்ணுகிறோம். அவை உண்மை தான். அது ‘Sensual Empiricism'. நாம் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது மற்ற பல. ‘Eye of the Flesh'. அனால் நாம் அதோடு நிறுத்திக் கொள்கிறோம். அதில் தான் பிரச்சனையே.


இது தான் Empiricism என்று நாம் எடுத்துக் கொண்டால் Imaginary number 'i'யை Empiricalஆக நாம் நிரூபிக்க முடியுமா? அவ்வள்வு ஏன் -1 போன்ற ஒரு negative numberயை புற உலகில் நம்மால் எங்காவது காண முடியுமா? இயற்பியலில் இருந்து கணிதம் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பலவித குறியிடுகள், சின்னங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? ஒரு கணித வல்லுணர்க்கோ ஒரு இயற்பியல் விஞ்ஞானிக்கோ இந்த குறியிடுகளும், சின்னங்களும் ஒரு அழகான சித்திரத்தையே அளிக்கின்றன. இவற்றை நம்மால் ‘Eye of the Flesh'யை உபயோகித்து எங்கும் காண முடியாது. இவை மனங்களிலேயே எழுகின்றன. இவை ‘Mental Empiricism'. 'Eye of the Mind'. தருக்கம், கணிதம், தத்துவம், Semiotics போன்ற பலவும் இதில் இருந்தே எழுகின்றன.

அதே போல் ‘Supra Mental Empiricism'.( ஒரு oxymoron போலத் தோன்றலாம்). அல்லது ‘Eye of the Spirit'. ஆன்மீக அனுபவத்தை புரிந்து கொள்ள இதில் தான் முடியும். வார்த்தைகளால் அதைப் பற்றி ஒரு ஒரு வித வர்ணனை வேண்டுமானால் கொடுக்க முடியுமே தவிர அதை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அதாவது 'SupraMental' அனுபவத்தை ‘Mental Empiricism/‘Eye of the Mind'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது. 'Eye of the Spirit'இல் இருந்தே முடியும். ‘Contemplation' செய்து நாம் நம் அடியாழத்தில் உணரும் ஒன்றை ஒரு 'Mental Plane'ல் இருந்து உள்வாங்கிக் கொள்ள முடியாது.

கடைசியில் ஒழுங்காக பதில் சொல்லாமல் டபாய்க்கிறாயா நீ என்று கேட்கலாம். உனக்கு எப்படித் தெரியும்? நீ என்ன கண்டாயா என்றும் கேட்கலாம். தாமஸ் குன்னின் Three Strands தான் நினைவுக்கு வருகிறது.

1) Instrumental Injunction [இதை நீ அறிய விரும்புகிறாய் என்றால், இதைச் செய் If you want to know this, Do this] - பதஞ்சலி யோக சூத்திரத்தில் இருந்து விபாஸனா வரை , சூஃபி தியான முறைகளில் இருந்து கிருஸ்த்துவ கூட்டுவழிபாடுகள் வரை பல வழிமுறைகள்.

2) Direct apprehension - தமக்கு சரியானது என்ற பாதை ஒன்றை தட்டுத் தடுமாறி உள்ளுணர்வின் உதவியோடு இனம்கண்டு அதில் பயணிப்பது.
ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கி உணர்வது.

3) Communal confirmation - உணர்ந்த அனுபவத்தை தன் குருவிடமோ தன் சங்கத்திடமோ (Commune அல்லது Sangha) பகிர்தல். மேலும் பயணித்தல்.

*-*-*

இவ்வகை 'அறிவியல், மதம், ஆன்மீகம்' போன்றவற்றைப் பற்றிய நம் பொத்தாம் பொதுவான எண்ணங்கள், ‘Empiricism' பற்றிய நாம் வைத்திருந்த புரிதல்கள் மற்றும் ‘Pre/Trans Fallacy' போன்றவைகளே பெரும் குழப்பங்களை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தின. ஃப்ராய்ட் ஆன்மீக அனுபவத்தை ‘Regression to Infantile' என்று சுருக்கியது... யூங் Mythology துணைக்கொண்டு Mysticismதுக்கு புதுவர்ணம் கொடுத்து மீண்டும் கொடி ஏற்றியது... காப்ரா ஆன்மீகத்தையும், Mysticismதயும் ‘Mental' empiricismத்தின் துணைக்கொண்டு உள்வாங்க நினைத்து Physicsயை Pseudo-Physics ஆக தேய்வுறச்செய்தது ...ராமசந்திரன் 'Sensory empiricism'ன் துணைக்கொண்டு அதை மேலும் ‘Neuronal Fireworks'ஆக சுருக்க நினைத்தது..இப்படி மேலும் பல சுருக்கங்கள், ஏற்றங்கள்.

Temporal Lobes நடக்கும் Neuronal Fireworks ஏன் ஆன்மீக அனுபவம் என்று சொல்லப்படும் ஒன்றுக்கு காரணமாக இருக்கக் கூடாதா என்று கேட்கலாம். இது மறுபடியும் ஆப்பிள் பழக் கதைக்கே நம்மைக் கொண்டு செல்கிறது.

வில்பர் இதை அழகாக விளக்குகிறார். இது அடுத்த பதிவில் Wilber Maps மற்றும் AQAL பற்றிச் சொல்லும் பொழுது இன்னும் விரிவாகப் புரியும். இப்போதைக்கு இது. உதாரணத்துக்கு Polygraph(Lie Detector) டெஸ்ட்டை எடுத்துக் கொள்வோம். நமது Galvanic Skin Response யைக் கொண்டு நாம் பொய் சொல்கிறோமா என்று ஓரளவுக்குக் கண்டுபிடிக்கலாம்.Polygraphயை நாம் ஏமாற்றவும் முடியும். அதை விட்டுவிடுவோம்.

நாம் பொய் சொல்வதால் நமது Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் பொய் சொல்கிறோமா? ராமசந்திரனின் தருக்கத்தை இங்கு உபயோகித்தால் ‘பொய்' என்ற ஒன்றே கிடையாது, இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தான்.

அதாவது பரவாயில்லை. Galvanic Skin Responseக்கு நமது 'Sexual Arousal' உடனும் தொடர்ப்பு உள்ளது. நாம் Arouse ஆவதால் Galvanic Skin Response எகிறுகிறதா? இல்லை Galvanic Skin Response எகிறுகிறதால் நாம் Arouse ஆகிறோமா?

இங்கும் ராமசந்திரனின் தருக்கத்தை உபயோகித்தால் ‘Sexual Arousal' என்ற ஒன்றே கிடையாதா?

அல்லது கிடையுமா?

இருப்பதெல்லாம் வெறும் ‘Galvanic Skin Response' தானோ?

*-*-*

வில்பர் இதை Causationயையும் Correlationயையும் குழப்பிக் கொள்வதால் வரும் வினை என்று சொல்கிறார்.ஆன்மீக அனுபவத்துக்கும் Temporal Lobesல் நடக்கும் தீப்பொறிகளுக்கும், Galvanic Skin Responseக்கும் Sexual Arousalக்கும் ‘Correlation' மட்டுமே உள்ளது. அதாவது Mindக்கும் Brainக்கும் அல்லது மனசுக்கும் மூளைக்கும் உடலுக்கும் இடையே இணைப்புகள், Correlationகளே உள்ளன. ஒரு EEG கருவியை நீண்ட நாட்களாக தியானத்தில் ஈடுபட்டிருந்த ஒரு புத்த பிக்குவின் மேல் பொறுத்தினால் 'Delta' அலைகளில் வித்தியாசம் தெரியும். ஒன்றை மற்றொன்றின் காரணியாகக்(Cause) கொள்வதே குழப்பத்திற்குக் காரணம். அப்படி சுருக்குவதும் ஒரு வித Reductionism.

(ராமசந்திரன் இதே போல் ‘Science of the Art' என்ற ஒரு கட்டுரையில் ஏன் நமக்கு பிகாஸோ ஓவியங்கள் பிடிக்கின்றன?..என்பது போல் பல நகைச்சுவைக் கருத்துக்களை தீவிரமாகக் கூறியுள்ளார். இதுவும் சுருக்குதலே. ஒருவித Metaphysical Blindness. பிக்காஸொவிலிருந்து பீத்தோவன் வரை அனைவரையுமே மூளைக்குள் அடைத்து நியுரான் மின்னல்களாக காட்டி விடலாம் என்ற ஒரு கனவு)

கென் வில்பருக்கும் காப்ராவுக்கும் நடந்த உரையாடலில் சிலதை வில்பர் தெளிவாக்குகிறார். ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே (தியானம், யோகம் உட்பட பல்வேறு வகைகள்) மட்டுமே உள்வாங்க முடியும்.தத்துவ விவாதத்தால் முடியாது. ஒரு பொதுப் புரிதலை மட்டுமே அவை உருவாக்க முடியும். அதே போல் கலை இலக்கியத்தாலும் முடியாது. அவைகளில் ஈடுபடுவது ஓர் ஆரம்பமே. சுயமிழத்தல் போன்ற transient, fleeting நிகழுவுகளே அதில் நிகழ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவை ஒரு முக்கிய ஆரம்பமாக அமையலாம்.

அதே போல் ஆன்மீக அனுபவத்தை உள்வாங்கும் பல்வெறு நிலைகளை ஒரு ‘Spectrum' போலவே வில்பர் பார்க்கிறார். இங்கே நாம் இதை பொதுவாக இரட்டை நிலைகளிலேயே பார்க்கிறோம். சுவிட்சு போட்டால் லைட் எரிவதைப் போல் தியானம் செய்து கொண்டே இருக்கும் போது திடீரென முகம் பிரகாசம் ஆகி ஞானடைந்து பின்னால் ஒளிவட்டம் வந்து ரமணரைப் போல் மாறாபுன்னகையோடு இருப்போம் என்பதைப் போல் அன்றி ஒரு வித Spectrum போலவே நம் அனுபவங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. அதே போல் இது ஏணிப் படிகள் போன்ற 'rigid' ஆன structure/hierarchy கொண்டதும் அல்ல. அலைகளைப் போல். ஆங்கிலத்தில் Flex-Flow என்று சொல்வார்கள்.

இதை விட முக்கியமாக ஆன்மீக அனுபவம் எவருக்கும் எந்த நிலையிலும் ஏற்படலாம் என்று சொல்கிறார். என்னடா ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே மட்டுமே உள்வாங்க முடியும் என்று கூறி விட்டு இப்படி முன்னுக்குப் பின் முரணாகபேசுகிறாரே வில்பர் என்று கேட்கலாம். ஆன்மீக அனுபவம் என்பதும் அனுபத்தை 'செரித்து, 'உள்வாங்கி' முன்னேறுவதும் ஒன்றல்ல. அனுபவம் மின்னல் போல் தான். அந்த சுவிட்சு போட்டால் எரியம் பல்பு போல்தான். திடீரென்று தோன்றி மறையும் fleeting experience. அது எவருக்கும் ஏற்படலாம். இயற்கைக் காட்சியை காணும் போது திடீரென் தோன்றி மறையலாம். நம் சுயம் பெருவெளியில் கலப்பதை ஒரு ஷணத்தில் நாம் உணரலாம். இது Nature Mysticism. இல்லை ஒரு கூட்டு வழிபாட்டின் போது எல்லையில்லா கருணை நம் மனதை ஆட்கொள்வதை உணரலாம். உணராமலும் போகலாம். இது Deity mysticism. அதே போல் அனெஸ்தீசியா dosage அதிகமானால்.... கஞ்சா மற்றும் போதை மருந்துகள் உட்கொண்டாலும் சிலவேலைகளில் (Politically Incorrectஆக இருந்தாலும் கூட) உணரலாம். ஒரு Crisis of Faithஇன் போது, மிகுந்த மன இருக்கத்தின் போது... ஏன் ஒருவர் மிகமிக அற்புதமாக கிட்டார் வாசிக்கும் போது சங்கீகத் கச்சேரியில் தன்னை இழந்து ஒருவர் பாடும் போது, கலைஇலக்கியதில் ஈடுபடும் போது.. ஏன் ஒரு கிரிக்கெட் வீரர் அற்புதமாக் விளையாடும் போது ... ஒருவர் மலை ஏறும் போது கூட ஏற்படலாம். அவற்க்கு Flow / Optimal experience என்று உளவியலில் பெயர். இவையும் ஆன்மீக அனுபவங்கள் தான். வில்பரை பொருத்தவரை எந்த ஒரு அனுபவம் நம் சுயத்தின் வேலிகளை விரிவடையச்செய்கிறதோ அவை அனைத்துமே ஆன்மீக அனுபவங்கள் தான். அவற்றின் Intensity/Natureயை பொறுத்து அவை Spectrumஇல் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

ஆனால் இவை காற்றுப் போல் transient/fleeting அனுபவங்கள். ஒருவித பயிற்சி மற்றும் தியானம், யோகம் மற்றும் Contemplative practice இல்லாமல் இவை permanent traits ஆகாது. Gross, Psychic, Subtle, Causal என்று போகும் பாதை Non-Dual வரை. அதுவரையில் விரிவாகிவந்த வேலிகள் Non-Dualல் இல்லாமல் போகின்றன. இவை எல்லாம் வெறும் Methphysical Speculation அல்ல. தாமஸ் குன்னின் கூற்றுப்படி ஒரு செயலை செய்து(Instrumental Injunction) ஒன்றைக் கண்டடைந்து(Direct apprehension) அதை அத்துறையில் இருக்கும் அறிஞர்களிடம் பகிர்ந்து பரிசீலித்த பின்னரே அவைகள் ஏற்கப்பருகின்றன. Psychic, Subtle, Causal, Non Dual என்பதை Laya Samadhi, Savikalpa Samadhi, Nirvikalpa Samadhi, Sahaja Samadhi என்றும் பலவித Koshaங்களைக் கொண்டும் இந்து மற்றும் புத்த மதங்களிலும் Nature Mysticism, Deity Mysticism, Soul mysticism மற்றும் Spirit என்று கிருஸ்துவத்திலும் கூறப்படுகின்றன.

இவை பற்றியும் Waves, Streams, States பற்றியும் மற்றொரு பதிவில் பார்ப்போம். இதில் முக்கியமானது இதுதான். இந்த அனுபவங்கள் எல்லாம் Fleeting என்பதும் அதே போல் ஒருவித பயிற்சி இல்லாமல் இவற்றை permanent traits ஆக்க முடியாது என்பதும் ஆன்மீக அனுபவம் என்பதை விட அதை உள்வாங்கி செரித்துக் கொள்வதே முக்கியம். அதே போல் இது எந்த நிலையில் இருப்பவருக்கும் மின்னல் போல் தோன்றி மறையலாம். Howard Gardner என்ற உளவியல் அறிஞர் ‘Multiple Intelligence Theory' என்ற ஒன்றை முன்வைத்தார். அதை கென் வில்பர் கொஞ்சம் செரிவாகினார். அறிவு பல்வேறு Streamகளாக(Logico-Mathematical, Cognitive, Aesthetic, Spatial,Kinesthetic, Moral, InterPersonal, Intrapersonal, Spiritual etc..) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வளர்ந்து கொண்டே போகின்றன. Cognitive Development மற்றும் Aesthetic Development அதிகமாக இருக்கும் ஒருவனுக்கு Moral Development கம்மியாக இருக்கலாம். உதாரணம் பிகாஸோ, பால் காகின், மரியா வர்கோஸ் ஜ்யோஸா. அதே போல் Logico-Mathematical streamல் அதிக முன்னேற்றம் உடையவர்கள் Interpersonal மற்றும் Kinestheticல் மோசமாக இருக்கலாம். உ.ம். John Nash. இவை பொது விதிகள் அல்ல. தன்மைக்கேற்ப மாறுபடும். அனைத்து சாத்தியக்கூறுகளும் இதில் வரலாம். ஒரு துறையில் தீவிரமாக செயல்படுவதிற்கும் மற்றோன்றை வெறுப்பதற்க்கும் இதுவே காரணம்.

இது ஆன்மீகத்துக்கும் பொருந்தும். Spiritual development அதிகமாக (அதிகம் என்பதை Relativeஆகவே பயன்படுத்துகிறேன்) உள்ள ஒருவரிடம், ஒரு துறவியிடம் கூட Moral Developmentஒ அல்லது InterPersonal Developmentஓ வளர்ச்சியடையாமல், இன்னும் Evolve ஆகாமல் இருக்கலாம். கார்லோஸ் காஸ்டனேடா (Carlos Castaneda) புஸ்தகங்களில் வரும் Don Juan, மற்றும் Rasputin, Osho போன்றவர்கள் உதாரணம். செக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 'சில' சாமியார்களும் இந்த எல்லைக்குல் வரலாம். இவர்கள் Psychic levelல் அகப்பட்டு அதற்கு அடுத்த ‘Subtle'க்கு நகர முடியாமல் சிறைப்பட்டவர்கள்.

அதே போல் ஒரு Egocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Egocentric values இன் வாயிலாகவே Interpret செய்வான். ஒரு Ethnocentric levelல் இருக்கும் ஒருவன் ஆன்மீக அனுபவம் அடைந்தால் அதை Ethnocentric valuesஇன் வாயிலாகவே புரிந்துகொள்வான். சிறந்த உதாரணம் இன்று நம் கண் முன்னே நடக்கும் மதவாத போராட்டங்கள்.

இதில் பின் நவினத்துவ கூறுகள் சிலவற்றை பார்க்கலாம். நமது அனுபவங்களை நாம் பரிதாபமாக உள்வாங்கிக் கொள்வது மட்டும் இல்லை. அதை நாம் தொடர்ந்து Interpret செய்து கொண்டும் அதற்கு அர்த்தங்கள் அளித்துக் கொண்டும் இருக்கிறோம். (Reality is not innocently perceived but actively interpreted and co-constructed).

இது ஏன் முக்கியம்? ஆன்மீக அனுபவத்தைச் சுற்றி உள்ள பற்பல ஒளிவட்டங்களை இது நீக்குகிறது. ஒரு serial killer, ஒரு ஏமாற்றுக்காரன், ஒரு சுயநலவாதி, ஒரு paedophile, ஒரு போத்திவேலு பண்டாரம்(ஏழாம் உலகம்) மாதிரியானவர்கள் கூட ஆன்மீக அனுபவத்தை (மனம் திருந்தி அல்ல. அவர்கள் அப்போது இருக்கும் நிலைகளில் இருந்தே) அடைய வாய்ப்புள்ளது என்று சொல்கிறது.

இது ஆன்மீக ஈடுபாடு உடையவர்களிடத்தே மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால் Streams of Development ஒரு வித 'Center of Gravity'யை தாண்டிய உடன் தான் இந்த Fleeting Transient Traits / Experience ஒரு வித Permananceய் நோக்கி நகர்கிறது என்றும் இது தொடர் பயிற்சியினால் தான் சாத்தியம் என்றும் சில முக்கியமான Streamகள் ஆன Cognitive, Moral, Interpersonal, Intrapersonal, Spiritual போன்றவை ஒருவரினுள் ஓர் அளவைத் தாண்டியவுடன் தான் ஆன்மீக அனுபவத்தை ஒருவரால் உள்வாங்கி செரித்து மேல்நோக்கி பயனிக்க முடியும் என்றும் கூறுவதால் இவற்றை பற்றி நாம் கொஞ்சம் யோசித்து ஆன்மீகம் குறித்த நம் பழைய கருத்துக்களை விவாதித்து மறுஆக்கம் செய்வோம்.

இதையே மேற்கொண்டு ஒரு விவாத தளத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல் ஆன்மீகம் மதம் மற்றும் நவீனத்துவம்/பின்-நவீனத்துவம் குறித்த பல வேறுபாடுகளை நாம் சிறிது தளர்த்த முடியும்.

அப்படி செய்வதே நல்லது. அதுவே சங்கரர், புத்தரில் இருந்து ரமணர் வரை, அரவிந்தரில் இருந்து கிருஷ்ணமூர்த்திவரை வரை, பிளாடினஸில் இருந்து ஷெல்லிங் வரை, தல்ஸ்த்தாயில் இருந்து கசான்ஸாகிஸ் வரையிலான முதியோர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இவையே இன்றைய நம் சூழலில் காணப்படும் அதீத மோதல்களையும், குழுமனற்பான்மையையும் கொஞ்சம் தளரச்செய்யும்.

இதுவரை சொன்ன அனைத்துமே பொய்கள் தான். Non-Dual/Sahaja Samadhi/Spirit நிலையில் இருந்து பார்க்கும் பொழுது. அந்த ஒரு Absolute நிலையில் இந்த Relative Reality அர்த்தம் இழக்கிறது. பிறகு எதற்கு இத்தனை வியாக்கியாணம்?

Relative Realityல் தான் நாம் உலாவிக் கொண்டும் தத்துவங்களை எழுப்பிக் கொண்டு உள்ளோம். அதைப் பற்றிய புரிதலும் அவசியமே.

இது போல் ஆன்மீகத்துக்கு இடம் சுட்டி பொருள் விளக்கம் தருவது பலருக்கு உவப்பானதாக இருக்காது. எனக்கும் தான். ஆனால் நம் சூழலில் உள்ள புரிதல்களைக் கொஞ்சம் செரிவாக்க, ஒருவித விவாதத்திற்கான தளத்தை உருவாக்க இது உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆன்மீகம், மதம் பற்றி கவித்துவமான நடையிலும் எழுதலாம். வேண்டுமென்றே தான் இந்த மாதிரி ஒரு உணர்ச்சியற்ற நடையை தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் இப்பதிவுக்கு இந்த நடையே சரி என்று பட்டது.

இன்று இது போன்ற ஒரு Integral Approachக்குக்கான தேவை தான் என்ன? ஒரு Knowledge Society/Information Societyஇல் அறிவுத்துறைகளே அதிகார மையங்களாக மாறுவதற்கான சந்தர்பங்கள் வலுவாக உள்ளன. அறிவுத்துறைகள் இது போன்ற சுருக்குதல்கலால் பிளவுபட்டு binary oppositionகளாகவே உள்ளன. அந்த வகை Reductionist, Fragmented உண்மைகளே மாறாத்தத்துவங்களாக, அமைப்புளாக நம்மை நசுக்குகின்றன. நேற்று உளவியலில் இருந்த இந்த சுருக்குதல்தன்மை இன்று Economicsக்குள் புகுந்துள்ளது. Economicsஓடு Behaviourismமும் கைக்கோர்த்து Behavioural Economicsஆக இன்று பல அதிசியத்தக்க ஆராய்சிகளை செய்து வருகிறது. முதல் தடவை படிக்க பிரமிக்கச் செய்கிறது. கொஞ்சம் யோசித்து மறுபடி படித்தால் அதன் போதாமைகள், சுருக்குதல்தன்மை போன்றவை புரிகின்றன. Tim Harfordன் ‘Logic of Life'இல் வரும் இந்தக் கட்டுரையை மீண்டும் ஒரு முறை வாசித்து கொஞ்சம் யோசியுங்கள்.

இதுவரை படித்தீர்கள் என்றால் மிக்க நன்றி. சிலர் பாதியிலேயே ஃபாஸிச மலம் நிலபிரபுவுத்திவ மதிப்பீடுடைய பார்பனீயக் குப்பை என்றோ Pseudo-Secular கயமைத்தனம் என்றோ வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். எதற்கு இந்த மாதிரி பிளவுபடா உண்மை பற்றிய கனவுகள்? ஒரு வகையில் இவை totalitarianism தானே என்று கேட்கலாம்? அது போன்ற totalitarian கனவுகள் தானே perennial philosophy ஆக நம் மக்களை நசுக்கியது? அவை தானே தடம் மாறி ஹிட்லரிலும் மாவோவிலும் ஸ்டாலினிலும் புஷ்ஷிலும் முடிந்தது? ஏன் இன்னமும் இந்த , பிளவுபடா உண்மைக்கான கனவு? எதற்க்காக அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்தத்தைக் கற்பிக்கத் துடிக்கும் பேராசை?

ஏன் என்றால் 'Man is condemned for meaning'. Condemned to find big picture.

Big picture, Grand narrative எல்லாம் கூடாது என்று கூறும் பின் நவீனத்துவம் கூட ஒரு Big pictureயையே அளிக்கிறது. Big picture கூடாது என்ற ஒரு Big pictureயை அளிக்கிறது. Grand Narratives கூடாது என்ற Grand Narrativeயையே அளிக்கிறது. Hierarchy, Absolute values கூடாது என்ற ஒரு hierarchyயை, valuesயை அளிக்கிறது.

நவீனத்துவம், பின் நவீனத்துவம் மற்றும் Perennial Philosophy போன்றவற்றைப் பற்றி கென் வில்பர் என்ன கூறுகிறார் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

*-*-*

அன்றாட சலிப்புகளினிடையே ஊடாடும் நம் வாழ்க்கைக்கு இவையே வர்ணங்க்ளை அளிக்கின்றன . பூங்காக்களில் உலாவுவதை விட காட்டில் தேடி அலைவதே நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.




(பி.கு: அதிகப்படியான ஆங்கிலக் கலப்பு தமிழில் என் போதாமைகளினாலேயே. அவற்றுக்கு கலைச்சொற்கள் என்னவென்று சொன்னால் மிக்க உதவியாக இருக்கும்)

22 comments:

said...

மிக நிதானமாக, இரண்டு முறை மொத்த பதிவையும் படித்தேன். சுட்டிக்கு டிவிட்டர் வழியாக பத்ரிக்கு ஏற்கனவே நன்றி சொல்லியாகி விட்டது. ரிச்சர்டு டாகின்ஸும், தலாய் லாமாமும் சொன்னதையே வேறு வழியில் சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய புரிதல் தவறாகவும் இருக்கலாம்.

ஆன்மீக அனுபவம், மூளைக்குள் ஏற்படும் நியுரான் சிதறல்கள், கென் வில்பர் பற்றிய ஒரு முதன்மை அறிமுகத்திற்கு பிறகு இதனை மறுபடியும் வாசிப்பதாக உத்தேசம். வெகுஜன ரீதியில் எளிதாக acknowledge செய்து கொள்ளும் பலவிஷயங்களின் பின்புலங்களைப் பார்த்தால் அதன் அறிவியல் ரீதியான புரிதல்களும், மத/ஆன்மீக/இறை வழியான நம்பிக்கைகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் ஆச்சர்யப்படுத்தும். Edge.org-இல் வரக்கூடிய பல கட்டுரைகள், தமிழ் வெளியில் புரிதல்களோடு கருத்து மாற்றம் செய்யப்படும் நிலை இன்னமும் வரவில்லை. அந்நிலை இல்லாத பட்சத்தில் இம்மாதிரியான ரிலே ரேஸ் மாதிரியான fallacy-களில் மாட்டி கொண்டு முழிப்பது நிதர்சனமானது. இதனால் edge.org-லோ இல்லை டிம் ஹார்போர்டின் லாஜிக் ஆப் லைப்-போ முழுக்க முழுக்க ஒத்துக்கொள்ள கூடிய உண்மை என்றோ கருதி விட முடியாது.

ஆடம் ஸ்மித்தின் invisible hand தியரி தான் கேப்டலிசத்திற்கு அடிப்படை. ஆனால் 50-60 வருடங்களுக்கு பிறகு இந்த invisible hand தியரியே ஆட்டம் கொண்டிருக்கிறது, இப்போது எகனாமிஸ்டுகள் இதயம்/உணர்ச்சி சார்ந்த முதலாளித்துவம் (soul/heart driven kind capitalism) மற்றும் அரசு சார் முதலாளித்துவம் (state supported capitalism) போன்றவைகளை பேசி கொண்டிருக்கிறோம். ஆக இதன் எம்பிரிகல் சாட்சி என்பது அடுத்த 30-40 ஆண்டுகளில் தெரிய வரலாம். ஆக, நமக்கான அனுபவங்கள் என்பவையே ஒரு நதி போல ஒடிக் கொண்டிருக்கும் காலத்தின் தடங்களை வைத்துக் கொண்டு, நமக்கான உலகினையோ அல்லது ஒரு பொது உலகினையோ சிருஷ்டித்து கொண்டு ஒடிக் கொண்டிருக்கிறோம். ஆக கென் வில்பர் சொன்னதின் மாற்று அர்த்தம் (There is a truth in everyone' saying to an extent) ஒரு முக்கியமான தத்துவ அடிப்படை.

இது தாண்டி, பொருளாதாரம் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோள் என்றிருக்கும் இன்றைய உலகத்தில் all science/technologies are leading towards economic freedom and liberalisation என்றொரு மாற்று கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதையும், நீங்கள் இறை vs. அறிவியல் சார்ந்த நம்பிக்கைகளின் வாயிலாக பார்த்தால் ஒரளவுக்கு உண்மையாக தோன்றும். ஏன் விவரம் அறிந்த விஞ்ஞானிகள் அது நாசாவாக இருந்தாலும், சிலுவை போட்டு விட்டு சாடிலைட்டினை ஏவுகிறார்கள் என்பதற்கும், ஒம் நமச்சிவாய என்று தினமும் திரிகால பூஜை செய்பவர்கள் கள்ளச்சாராயம் விற்கிறார்கள், கஞ்சா கடத்துகிறார்கள், ஆட்களை கொலை செய்கிறார்கள் என்பதற்குமான ஆன்மீக/இறை/மறை/அறிவியல்/மனம்/மூளை சார்ந்த நம்பிக்கைகளை ஆராய்வோமானால், அது வேறு ஒருவிதமான mental map-ற்கு நம்மை இட்டு செல்லும்.

ஆக இது ஒரு முடிவுறாத கருத்தியல் தர்க்கம்.

மற்றபடி, டிம் ஹார்போர்ட், ப்ரீக்னாமிஸ், டேவ் வேக்னர் என்று கலாய்த்தது என்னையும் சேர்த்து என்று எடுத்துக் கொள்கிறேன் ;)

said...

படித்ததற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

ரிச்சர்டு டாகின்ஸ் சொன்னதற்கு நேர் எதிர் திசையிலேயே இந்த பதிவும் கென் வில்பரின் கருத்துக்களும் உள்ளது.

அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை இணைப்பது இதன் நோக்கமன்று. ஒரு அறிவுத்துறை எப்படி இயங்குகிறது, அது எத்தனை ஒற்றைப்படையாக உலகத்தைப் பார்க்கிறது, எப்படி அது எதிர்மறைக் கருத்துக்களைச் சுருக்குகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவையைப் பற்றி கொஞ்சம் ஆராய்தலே இந்த பதிவின் நோக்கம். இயற்பியல், உயிரியல், உளவியலில் இருந்து தத்துவம், கலைஇலக்கியம் வரை இப்படிப்பட்ட சுருக்குதளுக்குப் பஞ்சமில்லை...

Economicsயே எடுத்துக் கொள்வோம். நீங்கள் சொல்வது போல் இன்று 'capitialism with a heart' போன்றவைகளைப் பேசிக்கொண்டு இருக்குறார்கள். Senthil Mullainathan போன்றோர் Behaviourial Economicsல் பல அற்புதமான ஆராய்ச்சிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவற்றால் என்னற்ற மக்கள் பயனடைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உற்று நோக்கினால் இதிலும் சில பிழைகள், சுருக்குதல்தன்மைகள்(Reductionism) போன்றவைகளைக் காணலாம். இதன் repercussionகளை அறிய முப்பது நாப்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை விட, இந்த தியரிகளை இதன் முன்னோடி தியரிக்களோடு compare செய்து தவறுகளின் patternகளை நாம் அறிய முனையலாம்.

Tim Hardordன் அந்த 'வாய்வழிப் புணர்ச்சி' பற்றிய கட்டுரையையே ஒரு சிறு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவில் டீனேஜர்கள் மத்தியில் Oral sex அதிகமானது ஏன் என்பதை ‘rational behaviour', 'reward/incentive and punishement' போன்றவையைக் கொண்டு விளக்க முயல்கிறார். ஒரு சமூகத்தில் அத்தகைய ஒரு நிகழ்விற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். தனி மனித மற்றும் சமூக உளவியல் காரணிகள் இருக்கலாம். கலாச்சாரக் காரணிகள் இருக்கலாம். அறவியல் காரணிகள் இருக்கலாம். Harford சொன்னது போன்ற Reward/Punishment, Risk avoidance போன்றக் காரணிகளாகக் கூட இருக்கலாம்.

ஆனால் Harfordஒ மற்ற காரணிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு வெறும் Reward/Punishment, Rational behaviour போன்ற காரணிகளை மட்டும் கொண்டு
Oral sex அதிகமானது ஏன் என்பதை சொல்ல முயல்கிறார். இது pure reductionism. இது தான் பல காலமாக பல்வேறு அறிவுத் துறையில் நடந்து கொண்டு இருக்கிறது.

இவற்றை தாண்டி ஒரு முழுமையான புரிதலை அடைய நமக்கு ஒரு 'Integral Approach' தேவை. 'Integral Approach' என்றால் என்ன, அதன் basic framework பற்றி அடுத்த பதிவில் எழுதிகிறேன்.


“ஏன் விவரம் அறிந்த விஞ்ஞானிகள் அது நாசாவாக இருந்தாலும், சிலுவை போட்டு விட்டு சாடிலைட்டினை ஏவுகிறார்கள் என்பதற்கும், ஒம் நமச்சிவாய என்று தினமும் திரிகால பூஜை செய்பவர்கள் கள்ளச்சாராயம் விற்கிறார்கள், கஞ்சா கடத்துகிறார்கள், ஆட்களை கொலை செய்கிறார்கள் என்பதற்குமான ஆன்மீக/இறை/மறை/அறிவியல்/மனம்/மூளை சார்ந்த நம்பிக்கைகளை ஆராய்வோமானால், அது வேறு ஒருவிதமான mental map-ற்கு நம்மை இட்டு செல்லும். ”

இதற்கு பதில் பதிவிலேயே உள்ளது. இவ்வுலகில் இதுவரையில் நடந்த பெரும்பாலான கோர வன்முறைகளுக்கும், மிகப் பெரிய போர்களுக்கும், அடுக்குமுறைகளுக்கும் மதமே காரணம் (Egocentric, Ethnocentric மதங்கள்). அதே போல் சலிப்பான, அர்த்தமில்லாத வாழ்க்கைககையில் இருந்து பலருக்கு ஒரு வித முழுமை உணர்வை, நிறைவைத் தருவதும் மதமே (Worldcentric religion / Spirituality). இது மிகவும் வியப்பான ஒன்று. இது புரிந்தாலே ஏன் Schrodindger, Wolfgang Pauli போன்ற பல அறிவியல் அறிஞர்களுல் ஆன்மீகக் கேள்விகள், நம்பிக்கைகள் எழுந்தன என்பதும் ஏன் சில 'பெரும் பக்தர்கள்' அகால Fraduகளாக இருக்கிறார்கள் என்பதும் புரியும்.

“science/technologies are leading towards economic freedom and liberalisation”

இதவும் ஒரு வித Reductionismஏ. Science/Technology economic freedomக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். அதுவே அது மட்டுமே காரணியாக இருக்க முடியும் எனபதில் உடன்பாடில்லை. நீங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றாலும் பெருப்பாலான Technocrats அந்த அர்த்தத்திலேயே இதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். 'Internet' போன்றவை ஒரு World-centric technology தான் என்பதில் மாற்றுக் கருத்தே
யில்லை. ஆனால் அந்த World-Centric technologyயை ஒரு Egocentric levelல் உள்ளவன் உபயோகிக்கிறானா, Ethnocentric levelல் உள்ளவன் உபயோகிக்கிறானா இல்லை World-Centric levelல் உள்ளவன் உபயோகிக்கிறானா என்பதைப் பொருத்தே அது economic freedom and liberalisationக்கு நம்மை இட்டுச் செல்கிறதா அல்லது அதற்கு நேர் எதிர் திசையில் செல்கிறதா என்பது தெரிய வரும்.

Individual, Behaviourial, Socio-Economic and Cultural என்று அனைத்திலும் மாறுதல் வந்தால் தான் அது எந்த வகை சுதந்திரத்திற்கு வழிவிடும். Economic freedom என்பது தனித்து இயங்கும் ஒன்று என்ற Economistகளின், Technocratsன் எண்ணமே இத்தகைய கருத்துகளுக்குக் காரணம். 'Problem of production & distribution' தீர்ந்தாலே அது trickle-downஆகி prosperityக்கு வழிவகுக்கும் என்பது அவர்களின் நூறாண்டுகளுக்கு மேல் இருக்கும் பழங்கருத்து.' இது வரையில் ‘problem of production'ம் தீரவில்லை. Prosperityயும் trickle-down ஆகி வரவில்லை. இது குறித்து E.F.Schumacher 'Small is beautiful'ல் எழுதுயுள்ளார் -

இது ஏன்? Economic Freedomதுக்கும், Individual consiousness development, Behavioural sophistications, Cultural trends மற்றும் Societal health & Developmentக்கும் சம்மந்தம் உள்ளது. They all have correlations. ஒன்று மற்றோன்றின் உதவியன்று வெகு தூரம் செல்ல முடியாது. அப்படி செயற்கையாக் ஒன்றை மட்டும் தூக்கிக் கொண்டு செல்ல முயல்வது ஆபத்தானது. உதாரணம் - பல Social Engineering programs, Mao's Cultural Revolution etc. இதைப் பற்றி விரிவாக பிறகு.

ஹார்போர்ட், ப்ரீக்னாமிஸ் என்று கலாய்த்தது என்னையும் சேர்த்துத் தான். நானும் சில காலம் விக்கீனாமிக்ஸ், அனுமார் வால்(Long tail:-)) என்று ஜல்லியடித்து கொண்டு இருந்தேன் :-)

said...

கட்டுரை super!
எப்படி நம்ம Reductionism!

Anonymous said...

Let them say anything, what is your "experience"?

We can talk, read, discuss about this with our limited knowledge as long as we wish to stand on the shore. But if we really want to 'know', then we need to jump into the water and experience...

said...

Hi,
I enjoyed your article. I was however intrigued as to why you "kind of" classified Ken Wilber's theories as extension and elaborations of Sri Aurobindo.

Rod Hemsel's article captures the differing perspectives of Ken Wilber and Sri Aurobindo. In my understanding, (i understand that understand is a personal thing), Ken Wilbers theories are less integral (though more verbose) and lack the clarity of seeing things from a higher plane where seemingly unrelated and contradictory movements and happenings in different areas harmonize, complement in an interesting way and inter-dependent on each other.

http://www.infinityfoundation.com/mandala/i_es/i_es_hemse_wilber.htm

To borrow Alan Kazlev's words, "the above article explains in detail how in formulating his Involution-Evolution philosophy, Wilber consistently mis-quotes and misunderstands Sri Aurobindo, and how Sri Aurobindo's evolutionary-transformative paradigm differs from Wilber's cyclic Buddist-inspired approach".

Wondering whether you have read Life Divine, writings of Satprem on the Integral Yoga of Sri Aurobindo and Mother, 13 volume work of "Mother's Agenda" and "Beyond Human Species" by Georges Van Vrekhem. Together, they seem to (atleast for me) offer an Integral picture or an Integral theory of Cosmos and its functioning in a far deeper and less contradictory way than Ken Wilber's theories. If you have already studied them, I would like to read your views on that.

Regards,
Siva Chinnasamy,
Boston, MA

said...

Looks like my URL didnt go through fully. Let me try again.

http://www.integralworld.net/hemsell.html

If this link does not go through, you can google for ""Ken Wilber and Sri Aurobindo: A Critical Perspective".

Regards,
Siva.

Anonymous said...

Wow....

After long search ...I find a good (? more than that) blog...
Your casual views are real, natural, and appreciated.

Can you touch upon our TN politics and click your views...
Do not be afraid of anything...

We (NRI) sitting on the world and compare our homeland glaringly.
Please take your time and evolve friend.

S.Ravi
Kuwait.

said...

Anon,

"We can talk, read, discuss about this with our limited knowledge as long as we wish to stand on the shore. But if we really want to 'know', then we need to jump into the water and experience..."

இதைத் தானே நானும் இங்கு சொன்னேன்?

“ஆன்மீக அனுபவத்தை ‘Contemplative Tradition' கூறிய வழிமுறைகளின் வழியே (தியானம், யோகம் உட்பட பல்வேறு வகைகள்) மட்டுமே உள்வாங்க முடியும்.தத்துவ விவாதத்தால் முடியாது. ஒரு பொதுப் புரிதலை மட்டுமே அவை உருவாக்க முடியும். அதே போல் கலை இலக்கியத்தாலும் முடியாது. அவைகளில் ஈடுபடுவது ஓர் ஆரம்பமே...”

said...

Siva,

I have read only a few important works of Aurobindo, so I can't comment in detail. I will read the article and will comment.

'What is Integral?' depends according to our perceptions. Some of my friends and relatives find Aurobindo's works very very convoluted and verbose. For some, Ken Wilber sounds convoluted.

As far as my limited reading of Aurobindo goes, he hasn't addressed the conflicts which are inherent between modernism/postmodernism and spirituality.

I would read the article and comment in detail. Thanks.

said...

Ravi,

படித்ததற்கு மிக்க நன்றி..

said...

Hi Baraka,
Sri Aurobindo and Mother present a picture of how evolution of expression of consciousness in the world acts behind various movements, revolutions, new developments - scientific, social, religious, arts, culture, literature, politics, governance, trade, sports, etc. And it was not mere speculations - for example he would say exactly what combination of universal forces are behind Ahimsa movement by Gandhi, what Truth it was trying to express, and what other Truth will supercede that in coming years, etc.

Mother and Sri Aurobindo explained many varied movements in Culture / society from impressionism movement to Nazi phenomenon to communism. Modernism vs post modernism is a small piece of the puzzle that can easily be seen in that light. The key is to patiently tread Sri Aurobindo, Mother to catch the plane which explains and harmonizes seemingly oppsite movements in the world. And this Integral theory was just a mere side effect of Sri Aurobindo's writings. His intention was Supramental yoga / Integral Yoga and this integral theory is a by product that needs to be pieced together by the reader. Satprem, A.S. Dalal and M.P Pandit to some extent help readers like us in understanding the vast ocean of literature there is - but it was for the reader to comprehend the theory. Approached from a philosophic view point, many would see it as convoluted / verbose. But the key is to approach it as Yogic manuals and philosophies and theories inherent in it would jump out to us.

The mistake Ken Wilber did was not to study the Mother and writings of Satprem and M.P. Pandit which would have helped him avoid the misconceptions he arrived at while understanding Sri Aurobindo and probably would have led him to improvise on his theories. Sri Aurobindo or Adventure in Consciousness may be a good introduction to begin with - for your friends. I am not at all surprised that they would find Sri Aurobindo to be convoluted / verbose. Reading original works of Sri Aurobindo needs a special attitude or talent because it was written for the purpose of Integral Yoga and not for intellectually curious. Many lines in Life Divine for example, were an expression of experiences that Sri Aurobindo had about Cosmos and not a philosophic mumbo jumbo. So there will be repetitions, looong sentences, etc. He refused to alter even a comma for the benefit of casual readers because that would alter the subtle meaning of the experiences presented in the text.

You seem to have a good talent in assimilating complex and wide ranging thoughts and being able to express them in a coherent fashion. (It is something that I want). Very very few thinkers, intellectuals or writers in India other than members of Sri Aurobindo Ashram and its followers have ventured into the depth of his writings. I would like to see someone like you dwelve deep into it and offer your writings. It is not an easy task at all! A _true_ reading / understanding of Sri Aurobindo and Mother's works may may take years / atleast months even for the Intellectually strong, because it would take some inner development to fully understand the writings. But it would be a great service to contemporary thought process and philosophic / theoretic discussions if someone could do it or atleast attempt it.

Regards,
Siva.

Anonymous said...

1.Your reduction of V.S.Ramachandran is a good example of Reduction ad absurdantum (Spelling ??)
2.Where are you ? Texas? New Jercy? But still memories of Reservation and periar seems to create bitter taste in mouth..
3.Well just because you are doing the parody of Petty Bourgeise label, it is not going to leave you.
4.Well all is not bad with petty bourgeise existance.Still you may be usefull and shed some light
Thanks
P.K.Rajan

said...

Dear Mr.Rajan,

"Your reduction of V.S.Ramachandran is a good example of Reduction ad absurdantum (Spelling ??)"

It would have been good if you could have elaborated on these and how exactly it became 'reductio ad absurdum'.

"Where are you ? Texas? New Jercy?"

I am in SingaraChennai. I don't understand what makes you think that I am staying in US.

"But still memories of Reservation and periar seems to create bitter taste in mouth.."

Whose mouth?


"Well just because you are doing the parody of Petty Bourgeise label, it is not going to leave you."

what/which is not going to leave me?

"Well all is not bad with petty bourgeise existance.Still you may be usefull and shed some light"

Thank you. Let there be light!

said...

//தாமஸ் குன் (Thomas Kuhn) 'The Structure of Scientific Revolution' என்ற புத்தகத்தை எழுதினார். அதைப் பற்றி ஒவ்வொருவரும் அவரவர்கள் விருப்பத்திற்கேற்க விளக்கம் கொடுத்தார்கள். ‘Paradigm', Injunction', 'Exemplar' அது இது என்று தங்களுக்கு என்ன தோன்றியதோ தங்கள் நம்பிக்கைக்கு எது ஏதுவாக உள்ளதோ அதைத்தான் அதையேத்தான் குன் கூறினார் என்றார்கள். //

பல மதங்கள் கூட திருக்குறளுக்கு இது போன்ற விளக்கங்கள் தான் கொடுக்கின்றன.

//இதுவரை படித்தீர்கள் என்றால் மிக்க நன்றி. சிலர் பாதியிலேயே ஃபாஸிச மலம் நிலபிரபுவுத்திவ மதிப்பீடுடைய பார்பனீயக் குப்பை என்றோ Pseudo-Secular கயமைத்தனம் என்றோ வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். //

இது இங்கே தேவையற்றது. நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லும் போது அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அதிகமாக நினைப்பது சிந்தனை தடையை ஏற்படுத்திவிடும்.

மற்றபடி, பலவற்றை இணைத்து அழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த தகவல்கள் ஆன்மிகம் பற்றி அறிய விரும்புவர்களுக்கு மிகவும் பிடிக்கும்

Anonymous said...

எழுத்தாளர் சாரு கொடுத்த சுட்டியின் (http://www.charuonline.com/june08/interest.html) வழியே இந்த பதிவுக்கு வந்தேன்.

ஒரு சில மட்டுமே எனக்கு புரிந்தது. திரும்பவும் படித்து விட்டு ஓரளவு புரிந்தால் பின்னூட்டுகிறேன்.

Baraka என்றால் blessing தானே?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஏய்!!! நீ என்ன சொல்ல வர்ற ? ;-)

Such a long writing. I felt good reading it. I didn't understand it much though. For me personnelly it is an introduction to many 'terms'.

துறை சார்ந்த பல கலைச்சொற்களின் அறிமுகம்.

I came here thro' link.

In all the concepts whatever you have quoted, "Fireworks in the brain" is much convincing to me. All proficiency, excellency etc are experiences.

என்னைப் பொறுத்தவரை, சிலறுக்கு மது போதை, சிலறுக்கு இசை போதை, சிலறுக்கு ஆன்மீகம். போதை பரவசத்தைக் கொடுக்கும். பரவசத்தின் வெளிப்பாடு - கலை, கவிதை, தத்துவம், மதம் எல்லாம்.

-விஷ்ணு.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

Hi,
I am reading about metaphysics and epistemology. I found lot of terms were very difficult for me to understand. Generally SPirutuality persons only studying about Metaphysics sort of things. Due to this interest two days back i purchased Homers Illiod. Two days i am trying to read. Bit difficult to understand. But your language is good. Lot of things i unerstand. Keep writing like this.

said...

அன்றாட சலிப்புகளினிடையே ஊடாடும் நம் வாழ்க்கைக்கு இவையே வர்ணங்க்ளை அளிக்கின்றன . பூங்காக்களில் உலாவுவதை விட காட்டில் தேடி அலைவதே நமக்கு ஒரு நிறைவை அளிக்கிறது.

very good quote.

Regards

Thadeus

Anonymous said...

விள்ளுபவர் காண்பதுமில்லை.
காண்பவரோ விள்ளுவதுமில்லை.

Anonymous said...

y dont u try with some other font.(to reduce font size). this font size sucks